நானுஓயா, கிலாரண்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (15) காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
குறித்த வெடிப்பு சம்பவத்தால் பாதிப்பு ஏற்படவில்லை. வீட்டின் சமையலறைக்கு மாத்திரம் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
நானுஓயாவில் இப்பகுதியில் இதற்கு முன்னரும் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டி.சந்ரு செ.திவாகரன்
