இடைத்தரகர்களினால் சுரண்டப்படும் மலையக விவசாயிகள்!

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக நாம் அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்றோம். ஒரு நாளில் ஒரு வேளையாவது நல்ல போஷாக்கான உணவுகளை உண்ண வேண்டும் என்பதே சாதாரண மக்களின் மிகப் பெரிய தேவையாக உள்ளது. ஆனால் அத்தகைய ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பற்றி எம்மில் பலர் சிந்திப்பது மிகக் குறைவு.

மலையக மக்கள் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் அதேவேளை அதற்கு இணையாக மரக்கறி, பழங்கள், பால் உற்பத்தி போன்றவற்றையும் ஜீவனோபாய தொழிலாக மேற்கொள்கின்றனர். ஒருபுறம் நாளுக்கு நாள் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஆனால் மறுபுறம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது. மரக்கறிகளை சந்தைப்படுத்துவதில் இடைத்தரகர்களின் செல்வாக்கு காரணமாக விவசாயிகள் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மலையகத்தில் மரக்கறிச் செய்கையாளர்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர். நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, வலப்பனை , வெலிமட மற்றும் பதுளையை சூழவுள்ள நிலங்கள் மரக்கறிச் செய்கைக்கு பொருத்தமான நிலங்களாகக் காணப்படுகின்றன.

இப்பகுதி மரக்கறி பயிர்ச் செய்கையாளர்கள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து தமது தொழிலை மேற்கொள்கின்றனர். பயிர்களை செய்கை செய்வது தொடக்கம் அவற்றை விற்பனை செய்வது வரையில் பல்வேறு தரப்பினர்களினால் அவர்கள் சுரண்டலுக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

பயிர்களை விளைவிக்கும் ஆரம்பகட்ட செயற்பாட்டில் இயற்கை அனர்த்தங்களினாலும், காட்டு விலங்குகளின் அட்டகாசத்தினாலும் பயிர்கள் அதிகளவில் சேதமடைகின்றன. நாட்டில் தற்போது நிலவி வரும் பசளை பிரச்சினைகளும் கிருமிநாசினிகளுக்கான தட்டுப்பாடும் வழமையான விளைச்சலைக் குறைத்துள்ளன. இதனால் செய்தியாளர்கள் நஷ்டத்தையே சந்திக்கின்றனர்.

இது போன்ற பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க இடைத்தரகர்களினால் மரக்கறிச் செய்தியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். உற்பத்திப் பொருட்களுக்கான விலையை தீர்மானிப்பவர்கள் இடைத்தரகர்களேயாவர். செய்கையாளர்களின் காலடிக்கு வந்து உணவு உற்பத்திகளைக் கொள்வனவு செய்யும் இவர்கள், தாங்கள் வாங்கும் விலையை விட பலமடங்கு அதிக விலைக்கே சந்தையில் அவற்றை விற்பனை செய்யும் போக்கு உள்ளது.

மரக்கறிச் செய்கையாளர்களுக்கு ஒரு சில அற்ப சலுகைகளை வழங்கி குறைந்த விலையில் பசளை, கிருமிநாசினிகளை பெற்றுத் தருவதாகக் கூறி பாரிய அளவில் சுரண்டும் செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இடைத்தரகர்கள் செய்கையாளர்களிடம் பேரம் பேசி குறைந்த விலையில் தரமான பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளை இலாபம் ஈட்டிக் கொள்கின்றனர். இங்கு சாதாரண செய்கையாளர்கள் இடைத்தரகர்களினால் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர்.

இச்செயற்பாட்டில் அதிகளவில் பாதிக்கப்படுபவர்கள் சிறுதோட்ட செய்கையாளர்களேயாவர். சிறிய அளவில் செய்கை செய்பவர்கள் நடப்பு நிலைமைகளை ஆராயாமல் இடைத்தரகர்கள் கூறுவதை நம்பி ஏமாற்றம் அடைகின்றனர். போக்குவரத்து வசதிகள் இன்மை, சந்தைப்படுத்தலில் எதிர்நோக்கும் சிக்கல்கள், செய்கையாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையில் காணப்படும் இடைவெளி என்பன இடைத்தரகர்கள் சாதகமான வாய்ப்புகளை பெற்றுத் தரும் காரணிகளாகின்றன.

நாட்டில் நிலவி வரும் கொரோனா நோய்த்தொற்று நிலைமையும் இம்மரக்கறிச் செய்கையாளர்கள் வருமானம் ஈட்டுவதில் சவாலாக அமைந்துள்ளது. நாட்டின் முடக்க நிலைமை நடைமுறையில் இருந்த போது மரக்கறிகள் இலகுவில் பழுதடைந்தமையினாலும், விலை குறைந்ததாலும் மரக்கறிச் செய்கையாளர்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறு பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கும் மரக்கறிச் செய்கையாளர்களுக்கு சரியான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம். அரசாங்கமும் உரிய அதிகாரிகளும் இச் செய்கையாளர்களின் நலன் பேணும் செயற்பாடுகளில் ஈடுபடுவது அவசியமானதாகும்.

அரசாங்கம் செய்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் உற்பத்திப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அரசாங்கம் தலையிட்டு இச்செயல்பாடுகளை கண்காணித்தல் சிறந்ததாக அமையலாம். இடைத்தரகர்களினால் பாதிப்படையும் இவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும். உள்ளூர் விவசாயிகளுக்கு சிறந்த வழிகாட்டல்களை மேற்கொள்ள வேண்டும். உள்நாட்டில் இயங்குகின்ற பிரபல்யமான பல்பொருள் அங்காடிகள் நேரடியாக செய்கையாளர்களிடம் சென்று காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதன் ஊடாக செய்தியாளர்கள் ஓரளவாவது இலாபம் அடைவர்.

விவசாயத் திணைக்களம் ஊடாக மாணியங்களை வழங்கி மரக்கறிச் செய்கையாளர்களை ஊக்குவிக்க வேண்டியது அரசாங்க அதிகாரிகளின் கடமையாகும். பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகும் மலையக சமூகம் தொடர்ந்தும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை காணப்படுகின்றது. மரக்கறிச் செய்கையாளர்களின் வறுமை நிலை மாறவில்லை. அவர்கள் அன்றாடம் உழைக்கின்றனர். தரமானவற்றை விளைவிக்கின்றனர். ஏனையோரின் ஆரோக்கிய வாழ்வை உயர்த்துகின்றனர். ஆனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் மட்டும் இதுவரையில் வறுமைக்குள் புதையுண்டே உள்ளது.

ச. மங்களதர்ஷினி
ஊடக கற்கைகள் துறை
யாழ். பல்கலைக்கழகம்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles