இலங்கை தரநிர்ணய நிறுவனத்தால் அனுமதி வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை மட்டும் சந்தைப்படுத்துமாறு ‘லிட்ரோ’, மற்றும் ‘லாப்’ கேஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், உரிய தரம் இல்லாமல் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களை குறித்த நிறுவனங்களுக்கு மீளப்பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் செயற்பாட்டாளர் நாகானந்த கொடிதுவக்குவால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சமயத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தொடர்பான மேலதிக வழக்கு விசாரணை ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறும்.










