எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, இந்திய அதிகாரிகளிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளதென அறியமுடிகின்றது.
கடும் நிதி நெருக்கடியால் இந்தியாவிடம் இலங்கை அரசு கடன் கோரியுள்ள நிலையில் அது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாடு இதன்போது வினவப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதன்போது நாட்டு மக்கள் பாதிக்கப்படக்கூடாதென்பதால், இலங்கைக்கான ஒத்துழைப்பை வழங்குமாறு இந்திய தரப்புக்கு சஜித் கூறியுள்ளாரெனவும் அறியமுடிகின்றது.
