கதை கேட்க ஹோட்டலில் ரூம் போட சொன்ன அஷ்வின்.. செம கடுப்பான தயாரிப்பாளர்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஷ்வின். இந்த நிகழ்ச்சியின் மூலம் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

ஆம், தற்போது என்ன சொல்ல போகிறாய் எனும் படத்தில் நடித்துள்ள முடித்துள்ள அஷ்வின், சமீபத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

சமீபத்தில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அஷ்வின் ” எனக்கு கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிடுவேன். கிட்டத்திட்ட இதுவரை நான் 40 கதைகள் கேட்டிருக்கேன். அந்த 40 கதைகள் கேட்டு நான் தூங்கிட்டேன்.

நான் தூங்காத ஒரே ஒரு கதை, இந்த படத்தோட இயக்குநர் ஹரிஹரன் சொன்ன கதை மட்டும் தான். நான் அவர்கிட்ட சொன்னேன், நான் இந்த கதை கேட்கும்போது தூங்கல. அதுனால நான் இந்த படத்துல கண்டிப்பா நடிக்குறேன் ” என்று பேசியிருந்தார். அஷ்வின் பேசிய இந்த விஷயம் இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து நெட்டிசன்கள் அஷ்வினை கலாய்த்து வந்தனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சையை இன்னும் ஓயாத நிலையில், அடுத்ததாக அஷ்வின் குறித்து ஒரு சர்ச்சை வெளியாகியுள்ளது. சமீபத்தில், ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்திற்கு இயக்குநர் ஒருவர் கதை சொல்லியிருக்கிறார்.

அந்த கதை பிடித்தவுடன், அந்த தயாரிப்பு நிறுவனம் அக்கதையில் நடிக்க அஷ்வினை அணுகியிருக்கிறது. அதற்கு அஷ்வின் ‘ஒரு முன்னணி நட்சத்திர ஹோட்டலில் குறிப்பிட்ட ரூம் நம்பரில் தான் கதை கேட்பேன், நீங்கள் அந்த ரூமை புக் பண்ணிவிட்டு சொல்லுங்க’ என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு சரி என்று கூறி, அந்த தயாரிப்பு நிறுவனமும் ரூமை புக் செய்துவிட்டு, இயக்குனரை அனுப்பியுள்ளது. காலையில் இருந்து காத்துக்கொண்டிருந்த இயக்குனர், மாலை வரை அஷ்வினுக்காக காத்துகொண்டு இருந்துள்ளாராம்.

ஆனாலும், அஷ்வின் வரவில்லையாம். ஏனென்று விசாரித்தால், ‘எனக்கு இன்று மூடு சரியில்லை. நாளைக்கு மீட் பண்ணிக்கலாம்’ என்று கூறிவிட்டாராம். இதனால் கடுப்பான அந்த தயாரிப்பு நிறுவனம். இப்படத்தில் அஷ்வின் பதில் வேறொரு நடிகரை நடிக்க வைக்க முடிவேதுவிட்டதாம்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles