அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
07 கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் நேற்று (21) ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிப்பகிஷ்கரிக்கு இன்று (22) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும், அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளின் செயற்பாடுகள் உரியவாறு முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழுவின் உறுப்பினர், வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
