ஒமைக்ரொன் பரவல் தொடர்பான ஆய்வு இன்னும் நிறைவடையவில்லை -மருத்துவ ஆய்வு நிறுவகம்

ஒமைக்ரொன் கொவிட் வைரஸ் பரவல் தொடர்பில் சுகாதாரத்துறை இன்னும் ஆய்வு செய்து வருவதாக மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

அதன் தொற்று நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் ஜூட் ஜயமஹ சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.

ஒமைக்ரொன் வைரஸ் திரிபு எவ்வாறு ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு விரைவில் பரவலடைகிறது என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்படுகின்றது.

பண்டிகை காலம் என்பதால் இதன் பரவல் நிலை அதிகரித்து காணப்படும் என உலக நாடுகள் எச்சரித்துள்ள நிலையில், இலங்கையில் அது குறித்து மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மூன்றாம் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதன் ஊடாக அதன் பரவலைக் கட்டுப்படுத்த முடிவதுடன், பாதிப்பினை குறைத்துக்கொள்வதற்கான வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆய்வு நிறுவகத்தின் தொற்று நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் ஜூட் ஜயமஹ குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles