2007 ஆம் ஆண்டு மனைவியை கட்டையால் தாக்கி கொடூரமாக படுகொலை செய்த சம்பவத்தின் குற்றவாளியான கணவர், தலைமறைவாகியிருந்த நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
49 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான ஜஸ்மின் ரஞ்சனி என்பவரே இவ்வாறு படு கொலை செய்யப்பட்டிருந்தார்.
சந்தேக நபர் தலவாக்கலை தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளதுடன், வட்டகொட தோட்டத்தில் வசிந்து வந்துள்ளார்.
மனைவியை கொலை செய்த பின்னர் தப்பியோடி அவர், எம்பிலிப்பிட்டிய, துங்கம பிரதேசத்தில் தலைமறைவாக
வாழ்ந்து வந்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை நடத்திவந்த குற்றப் புலனாய்வு அதிகாரிகள் குழு, 74 வயதான நபரை எம்பிலிப்பிட்டிய
பகுதியில் வைத்து செய்துள்ளது.
