வெளிநாடு செல்பவர்களுக்கு மோசடியான முறையில் கொரோனா பரிசோதனை அறிக்கையை (பிசிஆர்) தயாரித்து – அதிக விலைக்கு விற்பனை செய்துவந்த கும்பல் சிக்கியுள்ளது.
கொச்சிக்கடையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே மேற்படி குடும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21 மற்றும் 37 வயதுடைய கொச்சிக்கடை மற்றும் ரத்தொலுகம பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தொலுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த பரிசோதனையின் போது 17 போலி PCR அறிக்கைகள், ஒரு கணினி, 5 கைத்தொலைபேசிகள் என்பனவும் மீட்கப்பட்டன.
