கடும் பொருளாதார நெருக்கடி! தங்க நகைகளை விற்கும் மக்கள்!!

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட பொது முடக்கம், பயணக்கட்டுப்பாடு, வேலையிழப்பு, வியாபாரம் பாதிப்பு மற்றும் தற்போதைய அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக, தம்வசம் வைத்திருந்த தங்க நகைகளை அடகு வைத்தல் மற்றும் விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நாடு முழுவதிலும் இந்நிலைமை காணப்படுகின்றது.

சிலர் வங்கிகளிலும், மேலும் சிலர் நகை அடகு பிடிக்கும் நிலையங்களிலும் அடகு வைத்து பணம் பெறுகின்றனர். மேலும் சிலர் நகைகளை விற்பனை செய்துவிடும் நிலைமையும் காணப்படுகின்றது.

மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையே இது எடுத்துக்காட்டுவதாகவும், அடுத்தாண்டாகும்போது மேலும் நெருக்கடி ஏற்படும் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொரோனா பரவல் முதல் இற்றைவரை சுமார் 600 கிலோ வரையான தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல புதிதாக தங்க நகைகள் வாங்குவதும் குறைவடைந்துள்ளது. பலர் தங்க முலாம் பூசப்பட்ட ஆபரணங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

Related Articles

Latest Articles