‘இ.தொ.காவுக்கு சுமந்திரன் வரவேற்பு – கடுப்பில் மனோ ‘! ‘காலைக்கதிர்’ பத்திரிகை சுட்டிக்காட்டு!!

” இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு, சுமந்திரன் வழங்கும் நெகிழ்ச்சியான வரவேற்பு , மனோ கணேசனின் கொதிநிலையை மேலும் உயர்த்தும் என்பது நிச்சயம்.” – என்று ‘காலைக்கதிர்’ பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

‘காலைக்கதிர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர், மூத்த ஊடகவியலாளர் ந. வித்தியாதரன் அவர்களால் – அப்பத்திரிகையில் ‘இனி இது இரகசியமல்ல’ எனும் தலைப்பின்கீழ் எழுதப்படும் அரசியல் அந்தரங்க பகுதியில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் கட்சிகளின் சங்கமத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சை நிலை, அக்கூட்டணி எதிர்நோக்கும் நெருக்கடி உள்ளிட்ட விடயங்களை ‘காலைக்கதிர்’ சுட்டிக்காட்டியிருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் நேற்று முகநூலில் பதிவொன்றை பதிவிட்டிருந்தார். எனினும், பத்திரிகையின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. ‘வடக்கின் ஓர் ஊடகர்’ என விளித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்து ‘இனி இது இரகசியமல்ல’ பகுதியில் இன்று பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதனை அவ்வாறே வழங்குகின்றோம்.

Related Articles

Latest Articles