புதிய திரிபுகள் உருவாகுவதற்கான சாத்தியம் -சுகாதார பிரிவு எச்சரிக்கை

கொரோனா நோய் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்று தற்போதே ஒரு முடிவுக்கு வரமுடியாது என்றும் எதிர்காலத்தில் புதிய திரிபுகள் உருவாகுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனா்.

ஆகவே மக்கள் தமது பாதுகாப்பை தாமே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளரும், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகமுமாக விசேட வைத்திய நிபுணர் ஹேம்நத ஹேரத் தெரிவித்தாா்.

இன்று இடம்பெற்று ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டாா். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால் அந்தப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொண்டு முடிந்தளவு விரைவாக மூன்றாம் கட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும். தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டால் மாத்திரமே நாட்டிலிருந்து கொரோனா நிலைமையை இல்லாதொழிக்க முடியும்.

சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றியும் நோய் நிலைமை பரவலடையுமாக இருந்தால், இந்த நிலைமை முடிவில்லாமல் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. டெல்ட்டா தொற்று பரவலடைய ஆரம்பித்தபோதும் இத்துடன் இந்த தொற்று பரவலடையாது என்பதே பல தரப்பினரின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், புதிதாக ஒமிக்ரோன் என் புதியவொரு திரிபு  பரவலடைய ஆரம்பித்தது.

ஆகவே, எதிர்காலத்திலும் புதிய திரிபுகள் ஏற்படாது என்று உறுதியாக கூற முடியாது. என்றாவதொரு நாள் தொற்று நிறைவுக்கு வந்தால் மாத்திரமே கொரோனா நோய் நிலைமை முடிவடைந்து விட்டது என்று கூற முடியும். அவ்வாறு இல்லாமல் தற்போதே புதிய திரிபுகள் உருவாகாது என்று கூற முடியாது. ஆகவே ஒவ்வொருவரும் தமது பாதுகாப்பை தாமே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles