தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக சுரேஷ் சுப்ரமணியம் தெரிவு!

இலங்கையின் தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக, கொழும்பில் உள்ள ஒலிம்பிக் இல்லத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தலில் சுரேஷ் சுப்ரமணியம் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுப்ரமணியம் 21 வாக்குகளைப் பெற்று தெரிவானார், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ 12 வாக்குகளைப் பெற்றார். சுப்பிரமணியம் 2022 முதல் 2024 வரை இந்த பதவியில் பணியாற்றுவார்.

கடந்த முறை 2018 இல் சுப்பிரமணியம் 18 வாக்குகளைப் பெற்ற அதேவேளை ரொஹான் பெர்னாண்டோ 12 வாக்குகளைப் பெற்றிருந்தார், இம்முறை சுப்பிரமணியம் கடந்த முறை​​யை விட 21 அதிக வாக்குகளைப் பெற்று தேசிய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியை உறுதிப்படுத்த முடிந்தது.

பெரும்பான்மை ஆதரவுடன் தெளிவான வெற்றியைப் பெற வழிவகுத்த அவர் தனது காலப்பகுதியில் வெளிப்படையான முறையில் விஷயங்களை நடத்தி ஒரு சிறந்த சாதனை படைத்தார், மேலும் இந்த வெற்றியின் பின்னர் அவர் புதிய பதவியை அதிக நம்பிக்கையுடன் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், செயலாளர் பதவிக்காக மெக்ஸ்வெல் டி சில்வா மற்றும் மொஹான் விஜேசிங்க ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற போட்டி மீண்டும் ஒருதலைபட்சமாக மாறியதுடன், மெக்ஸ்வெல் டி சில்வா 23 வாக்குகளைப் பெற்று அதிகூடிய வாக்குகளைப் பெற்று தெரிவுசெய்யப்பட்டதோடு, மொஹான் விஜேசிங்க 10 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

உண்மையில் மெக்ஸ்வெல் தொடர்ந்து மூன்றாவது முறையாக செயலாளர் பதவியை தக்கவைத்துள்ளார்.

நான்கு உப தலைவர் பதவிகளை ஜோசப் கென்னி (19 வாக்குகள்), நிலு ஜயதிலக (20 வாக்குகள்), சுரஞ்சித் பிரேமதாச (19) ஆகியோர் சுப்ரமணியம் அணியைச் சேர்ந்தவர்கள், மற்றையது பாலித பெர்னாண்டோ அணியின் காஞ்சன ஜயரத்ன (19 வாக்குகள்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

சுப்பிரமணியம் அணியைச் சேர்ந்த காமினி ஜயசிங்க 23 வாக்குகளைப் பெற்று மீண்டும் பொருளாளராக தெரிவு செய்யப்பட்டார், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அஜித் சியம்பலாபிட்டிய 10 வாக்குகளைப் பெற்றார்.

இதற்கு முன்னர் சுப்பிரமணியம் அணியைச் சேர்ந்த சேர்ந்த சந்தன லியனகே மற்றும் ஷிரந்த பீரிஸ் ஆகிய இருவரும் முறையே உதவிச் செயலாளர் மற்றும் உதவி பொருளாளர் பதவிகளுக்கு போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர்.

தேசிய ஒலிம்பிக் போட்டிகளின் முடிவுகள் பின்வருமாறு:

தலைவர் (1 பதவி): சுரேஷ் சுப்ரமணியம் (21 வாக்குகள்), பாலித பெர்னாண்டோ (12 வாக்குகள்)

உப தலைவர் (4 பதவிகள்): நிலு ஜயதிலக்க (20 வாக்குகள்), காஞ்சன ஜயரத்ன (20 வாக்குகள்), சுரஞ்சித் பிறமதாச (19 வாக்குகள்), ஜோசப் கென்னி (19 வாக்குகள்), ரிஸ்டி பாஹிம் (18 வாக்குகள்), பிரீத்தி பெரேரா (12 வாக்குகள்)

செயலாளர் (1 பதவி): மெக்ஸ்வெல் டி சில்வா (23 வாக்குகள்), மொஹான் விஜேசிங்க (10 வாக்குகள்)

பொருளாளர் (1 பதவி): காமினி ஜயசிங்க (23 வாக்குகள்), அஜித் சியம்பலாபிட்டிய (10 வாக்குகள்)

பிரதிப் பொருளாளர் (போட்டியின்றி): ஷிரந்த பீரிஸ்

பிரதிச் செயலாளர் (ஏகமனதாக): விங் கமாண்டர் சந்தன லியனகே.

Related Articles

Latest Articles