சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பூட்டு! எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இன்று (03) முதல் மீண்டும் மூடப்பட்டுள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக, மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் திறக்க முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இவ்வாறு மூடப்பட்டாலும், நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

டொலர் தட்டுப்பாட்டால் இதற்கு முன்னரும் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles