” நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் நுவரெலியாவுக்கு வந்தால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 2013 மாகாணசபைத் தேர்தலில் தோல்வியடைந்த அரவிந்தகுமார், 2015 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றார். அவர் மலையக மக்கள் முன்னணியில் அங்கம் வகித்தமையும், ஐ.தே.கவில் போட்டியிட்டமையுமே வெற்றிக்கு காரணம்.
2020 இலும் வெற்றிபெற்றார். அதற்கும் எமது கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியுமே காரணம்.
செந்தில் தொண்டமானுக்கு செல்வாக்கு உள்ளது. பணபலமும் இருக்கின்றது. ஆனால் அவர் வெற்றிபெறவில்லை. காரண ம்அவர் போட்டியிட்ட கட்சி.
அரவிந்தகுமார் நுவரெலியா வருதாக கூறியுளளார். வந்து போட்டியிடட்டும். அதற்கும் நாம்தான் வேட்புமனு கொடுக்க வேண்டும். அரவிந்தகுமார் நல்லவர். அவர் இப்போது இருக்கும் இடம்தான் சிக்கல்.” – என்றார்.
