” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் நாம் ஒருபோதும் கூட்டணி அமைக்கமாட்டோம்.” – என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பிரதான கட்சிகள் எனக்கூறிக்கொள்ளும் தரப்புகள் மக்களின் நம்பிக்கையை முழுமையாக இழந்துள்ளன. இதனால் தேசிய மக்கள் சக்தியை நோக்கி மக்கள் அணிதிரண்டு வருகின்றனர்.
மக்கள் நம்பிக்கையை இழந்துள்ள ஐக்கிய தேசியக்கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அரசிலிருந்து வெளியேறவுள்ள அணிகளை நாம் இணைத்துக்கொள்ளமாட்டோம். அவர்களை மக்கள் வெறுக்கின்றனர். அதனால்தான் எம்மை நோக்கி வருகின்றனர். மக்கள் விரும்பாததை நாம் செய்யமாட்டோம். அவ்வாறு செய்தால் மக்கள் அலை திசைதிரும்பும்.

மேற்படி கட்சிகளிலுள்ள முற்போக்கு சிந்தனையாளர்கள் எம்முடன் இணையலாம். அதற்கான அழைப்பை விடுக்கின்றோம். வருபவர்கள் தொடர்பில் உரிய பரீசிலனையின் பின்னரே இணைவு இடம்பெறும்.” – என்றார்.
