ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சில அரசியல் நகர்வுகளானவை தெற்கு அரசியல் களத்தில் – அரசியல் பிரமுகர்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல ரணில் விக்கிரமசிங்கவின் நகர்வுகள் தொடர்பில் வெளிநாட்டு இராஜாந்திரிகளும், உள்நாட்டு அரசியல் நிபுணர்களும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
கடந்த பொதுத்தேர்தலில் ஐ.தே.கவுக்கு வரலாறு காணாத தோல்வி ஏற்பட்டது. தேசியப்பட்டியல் மூலம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்க சபைக்கு வந்தார். அவ்வாறு வந்த பின்னர் அவர் சபை நடவடிக்கைகளில் அதிரடி காட்டிவருகிறார். இது அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவை கடந்தகாலங்களில் விமர்சித்த தேரர்கள்கூட தற்போதைய சூழ்நிலையில் ரணிலின் அரசியல் வகிபாகம் அத்தியாவசியம் என்றெல்லாம் சுட்டிக்காட்டுகின்றனர்.
முன்னாள் ஆளுநர்கள் மூவர் அண்மையில் ரணிலை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் பல உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுகளை நடத்திவருகின்றனர்.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க பிதமராக நியமிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது என்ற தகவலும் அரசியல் களத்தில் தற்போது வேகமாக பரவிவருகின்றது. சர்வதேச ஆதரவை கருதியே இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனக் கூறப்படுகின்றது. அதற்கான சாத்தியம் குறைவு என ஆளுந்தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையில் 2023 இல் ரணில் நிச்சயம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவாரென ஐதேகவின் தவிசாளர் வஜிர அபேவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதற்கான நகர்வுகள் எப்படி இடம்பெறும் எனவும் கட்சி சகாக்களிடம் கூறியுள்ளாரென தகவல்.
….










