வரலாற்று சிறப்புமிக்க சிகிரியா பிரதேசத்தை பார்வையிடுவதற்காக வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக சிகிரியா குன்று பராமரிப்பு திட்ட முகாமையாளர் நிசாந்த தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளினால் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.
தற்போது கொவிட்-19 தொற்று பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கடந்த இரண்டு மாதத்திற்குள் சுமார் 25 000 உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சீகிரியா பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதில் ஜப்பான், இந்தியா, கனடா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளே அதிகளவில் வருகை தந்துள்ளதாக தெரிய வருகின்றது.
