‘பகல்வேளையில் மின்வெட்டு இல்லை’

பகல் வேளையில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான அவசியமில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

5 நாட்களுக்கு போதுமான எரிபொருள் இதுவரை கையிருப்பிலுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க குறிப்பிட்டார்.

நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, இன்று (10) முதல் நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு நேற்று (09) அறிவித்தது.

மின்வெட்டை குறைத்துக்கொள்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என சபையின் பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles