இலங்கை ஆடை கைத்தொழில் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

இலங்கையின் ஆடைத் தொழில்துறை மற்றும் அது தொடர்பான தொழிற்சங்கங்கள், தொற்றாநோய் தடுப்பு தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதற்கு பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகளை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வர்த்தக உரிமையாளர்களும் ஊழியர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலான முக்கிய ஒப்பந்தமொன்றில் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

கோவிட்-19 தொற்றிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கும், மனித வளப் பயன்பாட்டை மேலும் மேம்படுத்துவதற்கும், தொழில்துறையின் உந்துதலில் ஒரு முன்னோடி மைல்கல்லாக, கூட்டு ஆடைத் தொழிற்சங்கங்களுக்கும் (JAAF) தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று (MoU) கைச்சாத்தானது.

JAAF இலங்கையில் ஆடைத் தொழிலில் முதன்மையான அமைப்பாகும் மற்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்பானது இத்துறையில் மூன்று முன்னணி தொழிற்சங்கங்களைக் கொண்டுள்ளது. அதாவது சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம், ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கம் மற்றும் கடல்சார் தேசிய சங்கம் ஆகியனவாகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களை தொழிற்சாலை இருதரப்பு சுகாதார குழுக்களுக்கு பரிந்துரைக்கலாம். இலங்கையில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் அனைத்து உற்பத்தி ஆலைகளாலும் நெருக்கமாக கடைபிடிக்கப்படுவதை இந்த குழுக்கள் உறுதி செய்கின்றன.

மேலும், JAAF மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகிய இருதரப்புக்கும் இடையிலான பிணக்குகளைத் தீர்க்கும் பொறிமுறையை நிறுவும் வகையில், தொழிற்சங்கங்களால் எழுப்பப்படும் எந்தவொரு குறைகளையும் JAAF நிர்வாகக் குழு மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்புக்கு மறுபரிசீலனை செய்யும் வகையில் ஊழியர்களின் குறைகளை வெளிப்படையான முறையில் ஒத்துழைத்து தீர்க்கும். JAAF மற்றும் அதனுடன் தொடர்புடைய சங்கம் அந்த காலத்தை நீட்டிக்க பரஸ்பரம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அனைத்து செல்லுபடியாகும் புகார்களும் ஒரு மாதத்திற்குள் விவாதிக்கப்பட்டு தீர்க்கப்படும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊழியர்களுக்கு ஒன்றுபடுவதற்கான சுதந்திரத்தையும் அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் திறனையும் வழங்குவதுடன் (Collective bargaining) உத்தரவாதம் அளிக்கப்படும்.

மற்றுமொரு முக்கிய படியாக, JAAF மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு இரண்டாவது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, அனைத்து பங்குதாரர்கள் மீதும் தொற்றுநோயின் எதிர்மறையான தாக்கத்தை நிர்வகிக்க மற்றும் ஒருங்கிணைக்க முதலாளிகளும் தொழிற்சங்கங்களும் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. தொற்றுநோய் உருவாக்கக்கூடிய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

“இலங்கையில் பல துறைகளில் மனித வளப் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும், தொற்றுநோய்க்குப் பின்னர் வர்த்தக பேண்தகைமையை உறுதி செய்வதற்கும் முதலாளிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.” என JAAFஇன் செயலாளர் நாயகம் டுல்லி குரே தெரிவித்தார்.

“தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நல்வாழ்வு தொழில்துறை மற்றும் தொழிற்சங்கங்கள் இரண்டிற்கும் முதன்மையான முன்னுரிமையாகும். எங்கள் தேவைகள் இறுக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் எங்கள் ஒத்துழைப்பை முறைப்படுத்துவதோடு, மேலும் ஒத்துழைப்புக்கான அடித்தளத்தை அமைக்கும், இது எங்கள் ஊழியர்களுக்கு பயனளிக்கும்.”

“தொழிற்சங்க கூட்டமைப்பை உருவாக்கிய அமைப்புகள் ஆடைத் தொழிலாளர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் உரிமைகளை உறுதி செய்வதில் வலுவான மற்றும் நிலையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தின.” என இலங்கை சுதந்திர சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் லெஸ்லி தேவேந்திர தெரிவித்தார்.

“இந்த ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம், இது மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும் செயல்பாட்டில் ஊழியர்கள் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், குறைகளைக் கையாள்வதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் உதவும். இந்த விஷயத்தில் முதலாளிகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.”

இந்த கூட்டணியானது ‘Better Work’ திட்டத்தை மிகவும் வரவேற்கிறது. இந்த திட்டம் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IFC) ஆகியவற்றுக்கு இடையே அரசாங்க பங்குதாரர்கள், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் ஒரு கூட்டு முயற்சியாகும்.

இது நிறுவனங்களின் பொருளாதார நம்பகத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துதல், பாலின சமத்துவம், தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் (OSH) மூலம் பணிபுரியும் இடத்தின் ஒத்துழைப்பை உள்ளடக்கியது மற்றும் பொதுவான நலன்களை மேம்படுத்துதல் மற்றும் குறிப்பாக தொற்றுநோய்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பங்களிக்கிறது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles