டிக்கோயா ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேகத்திற்கு நீர் வழங்கும் கிளை ஆறானா டிக்கோயா ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவத்தனர்.

மீட்கப்பட்ட ஆண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது எவராவது கொலை செய்து நீர்தேக்கத்தில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.

சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு 40 – 35 இடைப்பட்ட வயது மதிக்கதக்கவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles