பசறை, ஆக்கரதன்ன பகுதியில் கடந்த 6ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த 23 வயதுடைய இளைஞர், நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் கடந்த 6 ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்றதாகவும், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் பசறை பொலிஸ் நிலையத்தில் குறித்த இளைஞனின் தாத்தாவால் கடந்த 14 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டிலிருந்து, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது.
ராமு தனராஜா