சதொசவில் 75 ரூபாவுக்கு தேங்காய் பெறலாம் -பந்துல

லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பினூடாக இவ்வருடம் முழுவதும் 75 ரூபா என்ற நிர்ணய விலையில் தேங்காய்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் தேங்காய் விலை அதிகரித்துள்ள நிலையில் நுகர்வோருக்கு குறைந்த விலையில் தேங்காய் வழங்குவதற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் என்பன வர்த்தக அமைச்சு மற்றும் லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்புடன் உடன்படிக்கையொன்றை மேற்கொண்டுள்ளன.

இதன்படி, முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles