யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ். சுன்னாகம் மயிலினி காட்டுப்பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஏழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த வும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles