தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல்குழுக் கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது என அறியமுடிகின்றது.
இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அரசியல்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்துக்கு முன்னர் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளின் தலைவர்களும் எதிர்வரும் 26 ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
புதிய அரசியலமைப்பு, மாகாணசபைத் தேர்தல் உட்பட முற்போக்கு கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றி விரிவாக அலசிஆராயப்படவுள்ளன.
அத்துடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பதவிகளை வகித்த திலகராஜ், சண். பிரபாகரன் போன்றவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர்கள் வகித்த பதவிகளுக்கு புதியவர்களை நியமிப்பது சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்படவுள்ளது.