மீண்டும் நாட்டை முடக்க இடமளித்துவிட வேண்டாம்! மக்களை திரட்டி மாநாடு போட்டு கதறிய ஜனாதிபதி!!

கொரோனா வைரஸ்  தொற்று பரவலின் மத்தியில் நாட்டை மீண்டும் மூடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (09) கோரிக்கையொன்றை முன்வைத்தாா்.

அநுராதபுரத்தில் இன்று ஆயிரக்கணக்கானோரை கூட்டி கட்சி மாநாடு போட்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

சமூக இடைவெளி உள்ளிட்ட எந்த சுகாதார நடைமுறையும் இதில் பின்பற்றவில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி,

” உரம் அல்லது உரம் இல்லாமலேயே விவசாய சமூகத்தின் வருமானத்தை 100% அதிகரிப்பேன் என்பதைக் கூறிக்கொள்கின்றேன். இன்று நெல்லுக்கு சிறந்த விலை உள்ளது.

அபகரிக்கப்பட்ட நிலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விவசாய சமூகத்திற்காக என்னை அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கிறேன் என்ற உறுதிமொழியையும் வழங்குகின்றேன்.

விவசாயத்திற்கு எதுவும் செய்யாதவர்கள் இன்று விவசாயிகளை ஏமாற்றி, நாட்டை பாதாளத்திற்கு இழுக்க முயற்சிக்கின்றனர்.

தீவிரவாதிகளிடமிருந்து இந்த நாட்டை மஹிந்த ராஜபக்ச மீட்டார். அதன்பின்னர் வேகமாக அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.  எனினும், 2015 இல் போலியான தகவல்கள்மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. இராணுவத்தினர் காட்டிக்கொடுக்கப்பட்டனர்.  பிக்குகள் நீதிமன்றம் அழைத்துச்செல்லப்பட்டனர். இந்நிலைமையை நாம் மாற்றியமைத்தோம். தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மரபுரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.” – என்றும் குறிப்பிட்டார்.

மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள். நாட்டை மீண்டும் முடக்குவதற்கு இடமளிக்க வேண்டாம்.

இம்மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிகவும் ஆவேசமாக உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles