‘அரசியலில் அநாதையாக்கப்பட்டுள்ள சுசில் பிரேமஜயந்த’

அரசை கடுமையாக விமர்சித்ததால் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தற்போது அரசியல் ரீதியில் அநாதையாக்கப்பட்டுள்ளார்.

அவரை பதவி விலக்கும் முடிவை ஜனாதிபதி எடுத்தபோது, சுசுல் பிரேமஜயந்தவுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தனர். எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியிலுள்ள சில பங்காளிக்கட்சிகள் சுசில் பக்கம் நின்றன. இதனால் தெற்கு அரசியலில் சுசில் புதிய புரட்சி செய்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது சுசிலுக்கு ஆதரவாக எவரும் கதைப்பதில்லை. நிகழ்வுகளுக்குகூட அவரை அழைப்பதில்லையாம். இதனால் அவர் மனம் நொந்துபோய் உள்ளார். தினமும் உயர்நீதிமன்றம் செல்லும் அவர், சில முக்கியமான வழக்குகளை தற்போது கையாண்டுவருகின்றார்.

ஆனால் இது சுசிலின் தந்திரோபாய பின்வாங்கல் என்றும், தருணம்வரும்போது, அவர் அதிரடி காட்டுவார் எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles