ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஆபிரிக்க நாடுகளின் ஒத்துழைப்பை இலங்கை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஆபிரிக்க கண்டத்தில் இருபது நாடுகளுக்கான உயர் ஸ்தானிகரும், ஆபிரிக்காவிற்கான இலங்கை பிரதமரின் சிறப்பு தூதுவருமான வேலுப்பிள்ளை கணநாதன் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுதும் அதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் மாதம் 3 ஆம் திகதிக்கு முன்னர் சகல ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன் பரந்த அளவிலான பேச்சுகளை நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 49 ஆவது கூட்டத்தொடர் இம்மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம், 3ஆம் திகதிகளில் இலங்கை குறித்த விடயங்கள் விவாதிக்கப்படவுள்ளன.
இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை குறித்த கடுமையான அறிக்கையொன்று ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மூலமாக முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்படுவதுடன், இலங்கையும் தமது பக்க அறிக்கை ஒன்றினை சமர்பிக்கும் விதமாக அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில், சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் விதமாக இலங்கை அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை மும்முரமாக முன்னெடுத்து வருகின்றது.லங்கையின் பக்கம் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஆபிரிக்க கண்டத்தில் இருபது நாடுகளுக்கான உயர் ஸ்தானிகரும், ஆபிரிக்காவிற்கான இலங்கை பிரதமரின் சிறப்பு தூதுவருமான வேலுப்பிள்ளை கணநாதன் ஈடுபடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் அறிந்துகொள்ள முடிகின்றது.
கடந்த 2021 ஆம் ஆண்டிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஆபிரிக்க நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் வேலுப்பிள்ளை கணநாதன் ஈடுபட்டிருந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஏழு நாடுகளில் இரண்டு நாடுகள் எதிராக வாக்களித்ததுடன், 5 நாடுகள் வாக்களிக்காது தவிர்ந்து கொண்டன.
