உள்வீட்டு தகவல்களை அம்பலப்படுத்துகிறாரா லான்சா? குரல் பதிவு கசிந்ததால் தெற்கு அரசியலில் பரபரப்பு

தெற்கு அரசியலில் சர்ச்சைக்குரிய அம்பலப்படுத்தலொன்றை வெகுவிரைவில் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா வெளியிடுவாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான நிமல் லான்சா, கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு பதவியை வகிக்கின்றார்.

எனினும், அமைச்சின் செயலாளரின் தலையீடு, அரசியல் காரணிகள் உட்பட மேலும் சில விடயங்களை அடிப்படையாகக்கொண்டு குறித்த அமைச்சு பதவியை துறப்பதற்கு நிமல் லான்சா தயாராகிவிட்டார் எனவும், இதன் ஆரம்பக்கட்டமாக தனது பிரத்தியேக பணியாளர்களை அமைச்சிலிருந்து விலக்கியுள்ளார் எனவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இராஜினாமாக கடிதத்தை தயார் நிலையில் வைத்துள்ள நிமல் லான்சாவை சமரசப்படுத்தும் முயற்சியில் மொட்டு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

பஸில் ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் நிமல் லான்சா ஏன் இத்தகையதொரு நகர்வை கையாள்கின்றார் என்பது ஆளுங்கட்சியினருக்கு வியப்பாக உள்ளது. அண்மைக்காலமாக அரசின் செயற்பாடுகளையும் அவர் கடுமையாக விமர்சித்துவருகின்றார்.

நிமல் லான்சாவை சமரசப்படுத்தும் முயற்சி தோல்வி அடையும் பட்சத்தில், முக்கியமான சில விடயங்களை அம்பலப்படுத்திவிட்டு, அவர் பதவி துறப்பாரென தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு, மற்றுமொரு இராஜாங்க அமைச்சரான சனத் நிஷாந்த அச்சுறுத்தல் விடுக்கும் காணாலி தற்போது இணைய ஊடகங்களில் வைரலாகியுள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles