எஸ்.பி.பியின் உடல்நிலை சீராக உள்ளது – வெளியானது மருத்துவ அறிக்கை

பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் நிலை சீராக உள்ளது என்று வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 15 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி பொருத்தி, டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள்.

அதையடுத்து வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையும் கேட்கப்பட்டது. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று மாலை எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில், பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் நிலை சீராக உள்ளது. தொடர்ந்து எக்கோ மற்றும் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எஸ்.பி.பி. சரண் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

பாடல்களை கேட்கிறார், பாட முயற்சிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட இன்று எஸ்.பி.பி. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுவதுமாக உடல்நலம் தேறுவார் என எதிர்பார்க்கிறோம் என்று எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles