“ சமாதானத்துக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்” – என்று ஐ.நா.பொதுச்செயலாளர் நாயகம், ரஷ்யாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு ஐ.நா.பாதுகாப்புச்சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் இரத்துசெய்த சிறிது நேரத்தில் ., ஐ.நா.பொதுச்செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்குடன் தான் ஐ.நா.சபை உருவாக்கப்பட்டது.
என்ன நோக்கத்திற்காகஐ.நா.சபை உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை; ஆகவே சமாதானத்திற்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுங்கள் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரஷ்ய படைகளை தமது நிலைகளுக்கு திரும்புமாறும் அவர் கோரியுள்ளார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத நாடுகளுக்கு ரஷ்ய பிரதிநிதி நன்றி தெரிவித்துள்ளதுடன் இந்த தீர்மானம் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் எனவும் கூறியுள்ளார்.