சர்வக்கட்சி மாநாடென்பது மக்களை ஏமாற்றும் அரசியல் குண்டாகும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் இந்த அரசிடம் இல்லை. விமல் வீரவன்ச, கம்மன்பில போன்றவர்களின் நகர்வுகள்கூட நாடகம்தான். அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் இருவரும் இன்னும் அரசில் இருந்து விலகவில்லை .
நாட்டில் இதற்கு முன்னரும் சர்வக்கட்சி மாநாடுகள் இடம்பெற்றுள்ளன. நடந்தவைதான் என்ன? எனவே, இப்படியான மாநாடுகள் மக்களை ஏமாற்றுவதற்கான அரசியல் குண்டாகும்.” – என்றார் சரத் பொன்சேகா.
அதேவேளை, சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை. அது பற்றி ஆராயப்பட்டுவருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
