தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் பாராளுமன்ற உரையை இனவாதக் கருத்தாக கருதி, மக்களை குழப்பக்கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
” சி.வி.விக்னேஸ்வரனின் பாராளுமன்ற உரையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது அவரது தனிப்பட்ட கருத்து என்றே நான் கூறவேண்டும். சபாநாயகரே அதற்கு பதிலளித்து விட்டார். எனவே, இனியும் இதனை விவாதப் பொருளாக கருதக்கூடாது.ஏனெனில், இதற்கு முன்னரும் பாராளுமன்றில் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.