பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பஸ் சங்கங்களுக்கு இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் திருப்தியடைவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மக்கள் முகங் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு இந்த கட்டண அதிகரிப்பை ஏற்றுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அறிவிக்கப்பட்டுள்ள கட்டண அதிகரிப்பு போதுமானது அல்ல என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பஸ் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.










