விலையேற்றத்துக்கு எதிராக ராகலை சந்தியில் போராட்டம் (படங்கள்)

நுவரெலியா – இராகலை மாக்குடுகலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் நாட்கூலி தொழிலாளர்கள் ஆகியோர் இணைந்து 18.03.2022 அன்று இராகலை புருக்சைட் சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர்.

நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வருவதைச் சுட்டிக் காட்டியும் உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

சுமார் 100ற்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதோடு, மாக்குடுகலை நகரத்திலிருந்து புருக்சைட் சந்தி வரை எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். அதன்பின் அங்கு புருக்சைட் சந்தியில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

விவசாயம் செய்யும் எங்களுக்கு உர தட்டுப்பாடு நிலவுகின்றது, அதிக விலை மற்றும் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, தொடர் மின் விநியோக துண்டிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும் தட்டுப்பாடு இவற்றின் காரணமாக மலையக மக்களும் இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய மக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவித்தனர்.

சுமார் ஒரு மணித்தியாலயம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் பொலிஸாரின் தலையீட்டால் கலைந்து சென்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles