பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும், உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு அழுத்தம் கொடுத்து தமிழ் முற்போக்கு கூட்டணியால் பாரியதொரு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஏப்ரல் 04 ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிக்கு தலவாக்கலை நகரில் குறித்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கூட்டணியின் பங்காளிக்கட்சித் தலைவர்கள் உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்கள் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
