ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற மாநாட்டை புறக்கணிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் என்பன தீர்மானித்திருந்தன .
எனினும், முஸ்லிம் காங்கிரஸ் எம்.பியான ஹாபீஸ் நசீர் ,மக்கள் காங்கிரஸ் எம்.பியான முஸாரப் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
கட்சிக்கு அறிவித்துவிட்டே இவர்கள் சென்றிருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.