பந்துக்குள் ஹெரோயின் – சூத்திரதாரி கைது!

ரப்பர் பந்தொன்றுக்குள் சூட்சுமமான முறையில் ஹெராயினை மறைத்து வைத்து, மாத்தறை சிறைச்சாலைக்குள் வீசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் ஈ-கே கேஷ் மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு நீண்டகாலமாக இந்த வர்த்தகத்தை செய்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர் படகொன்றில் வந்து ஹெரோயின் அடங்கிய பந்தை சிறைச்சாலைக்குள் வீசிவிட்டு அந்தப் படகிலேயே கடலை நோக்கிச் சென்று விடுவதால் இவரை கைது செய்ய முடியாமல் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போதைவஸ்து மட்டுமின்றி கைத்தொலைபேசி, சார்ஜர் சிகரெட், புகையிலை போன்ற பல்வேறு பொருட்களையும் இவர் இதே விதமாக சிறைச்சாலைக்குள் வீசியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நபரை கைது செய்வதற்காக மாத்தறை சிறைச்சாலைக்கு அருகே பல நாட்களாக பொலிஸார் சிவில் உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதன் பின்னரேயே 22ஆம் திகதி இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும்போது இந்த நபரிடமிருந்து 89 00 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 5400 மிலிகிராம் ஐஸ் போதைப்பொருள் 15000 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் ,28350 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டது எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்

மாத்தறை, மெத்தவத்த, தஹம்கம என்ற இடத்தைச் சேர்ந்த 32 வயதான சந்தேகநபரே கைதுசெய்யப்பட்டவர்வார்.

சந்தேகநபரை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles