கொழும்பு, நுகேகொடை மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
53 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மின்வெட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரி மின்மாற்றியில் ஏறியபோது, மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின்போது குறித்த நபர் மதுபோதையில் இருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.