” கொள்ளையர்கள் மற்றும் அரசில் டீல் காரர்களுடன் அமைக்கப்படும் காபந்து அரசில் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பதவி துறப்பதற்கு தீர்மானித்துள்ளனர். நேற்று இராஜினாமாக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன.
இந்நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.