” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நாட்டை நிர்வகிக்க முடியாது என அன்றே நான் சொன்னேன். அது இன்று நடந்துள்ளது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார் .
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசியல் அனுபவம் இல்லை. அவர் ஒரு பிரதேச சபை உறுப்பினராககூட பதவி வகிக்கவில்லை. எனவே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டாம் என நான் வலியுறுத்தினேன். அவ்வாறு அவர் போட்டியிட்டால்கூட நாட்டை நிர்வகிக்க முடியாது. மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் என்றும் சொன்னேன். அது இன்று நடந்துள்ளது.” – என்றார்.