’69 லட்சம் பேர் ஜனாதிபதியுடன் அவர் பதவி விலகவேண்டியதில்லை’ -அமைச்சர் ஜோன்ஸ்டன்

இலங்கையிலுள்ள 69 இலட்சம் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று (04)  தெரிவித்தார்.

ஜனாதிபதி தனது இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த அமைச்சர், மக்கள் ஆணையை ஜனாதிபதி இன்னும் வைத்திருப்பதாக தான் நம்புவதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கு இன்னும் மக்களின் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றார்.

தற்போது முன்னெடுக்கப்படும் பொதுப் போராட்டங்கள் சிறிய போராட்டங்கள் என தெரிவித்த அமைச்சர், எனினும் மக்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles