நாளை நாடாளுமன்றில் என்ன நடக்கும்? அபாய சங்கு ஊதினார் கம்மன்பில

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, நாடாளுமன்றத்தில் நாளை சாதாரண பெரும்பான்மையையும் (113) இழக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆளுங்கட்சியை சேர்ந்த 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை எதிரணி பக்கம் அமர்வார்கள் என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தகவல் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles