‘கோட்டா கோ ஹோம்’ – பசறையிலும் வெடித்தது போராட்டம்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை, பதவியை விட்டு, வீட்டிற்கு போகுமாறு கோரியும், ஆட்சியாளர்களை வெளியேறுமாறு கோரியும், பசறையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று (இன்று) 05-04-2022 இடம்பெற்றது,

பசறை நகரின் மடுல்சீமைக்கு செல்லும் சந்தியிலிருந்து இவ் ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமாகி, பசறை பிரதேச சபை, பொலிஸ் நிலையம் ஆகிய இடங்களுக்குச் சென்று, பசறை பஸ் நிலையம் வரை சென்று கலைந்தது.

இப் பேரணியில் பசறை பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

Latest Articles