அரசிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவார்கள் என அறிவிக்கப்பட்ட 43 பேரில், மூவர் தாம் இன்னும் அப்படியானதொரு முடிவை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
அருந்திக்க பெர்ணான்டோ, ரொஷான் ரணசிங்க, கயாசான் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் தமது அணி சுயாதீனமாக செயற்படும் என நேற்று அறிவித்த அநுரபிரியதர்சன யாப்பா, பெயர் பட்டியலையும் வெளியிட்டார். அந்த பட்டியலில் அருந்திக்க பெர்ணான்டோ, ரொஷான் ரணசிங்க ஆகியோரின் பெயர்கள் இருந்தன. இந்நிலையிலேயே அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
விமல் வீரவன்ச வெளியிட்ட 16 பேர் கொண்ட பட்டியலில் கயாசான் எம்.பியின் பெயரும் இருந்தது. அவரும் தாம் அப்படியொரு முடிவை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.