தீர்வு என்ன? சபையில் இன்றும், நாளையும் விவாதம்!

நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்றும் நாளையும் முழு நாள் விவாதம் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களும் தம்முடன்தான் உள்ளனர் என அறிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் தமக்கு 113 என்ற சாதாரண பெரும்பான்மைக்கு சிக்கல் ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர், ரிஷாட் கட்சி உறுப்பினர்கள் மூவர், அரவிந்தகுமார், டயானா ஆகியோர் எதிரணியில் இருந்தபடி அரசை ஆதரித்தனர். இதில் முஷாரப் சுயாதீனமாக செயற்படபோவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles