இலங்கை வந்தடைந்தார் கலாநிதி நந்தலால் வீரசிங்க

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கடமைகளைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அழைக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் வசித்து வந்த மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இன்று நாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் சிரேஷ்ட பொருளியல் நிபுணர்களில் ஒருவரான நந்தலால் வீரசிங்க, இந்தியப் பொருளாதாரம் பாரிய மந்த நிலைக்கு உள்ளாகிய வேளையில், அதனை நிர்வாகிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தால் நியமிக்கப்பட்ட குழுவிற்கு தலைமை தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles