ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவையும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவையும் மீண்டும் சங்கமிக்க வைப்பதற்கு அவர்களின் நட்பு வட்டாரம் மேற்கொண்ட முயற்சி கைகூடவில்லை.
விமல் வீரவன்ச ஜே.வி.பியில் இருந்த காலப்பகுதியில் அநுரவுக்கும், அவருக்கும் இடையில் சிறந்த நட்பு இருந்தது. கட்சியின் பீரங்கி பேச்சாளர்களாகவும் வலம் வந்தனர்.
எனினும், ஜே.வி.பியில இருந்து விமல் வீரவன்ச வெளியேறிய பின்னர், நட்பு முறிந்தது. இருவரும் அரசியல் சமரில் ஈடுபட்டனர். தற்போது விமல் அரசில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே இருவரையும் இணைக்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமலின் மனதில் இனவாதம் குடிகொண்டுள்ளது, அது எமது கட்சிக்கு பொருந்தாது என அநுர தரப்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி ஆகியோரை இணைத்துக்கொள்வதற்கு ஜே.வி.பியினர் தயாராகவே உள்ளனர்.