நாட்டில் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் சில இடங்களில் இன்று மதியம் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்காரணமாக, கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவறுத்தப்பட்டுள்ளனர்.