யாழில் பெரும் சோகம் – விபத்தில் சிறுவன் பலி!

யாழ். நகர் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார்.

தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை, பின்னால் சென்ற பாரவூர்தி மோதியுள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த சிறுவன் , வீதியில் விழுந்து பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

சம்பவம் தொடர்பில் அறிந்து யாழ்ப்பாணம் பொலிஸார் , சம்பவ இடத்திற்கு விரைந்து , பாரவூர்தி சாரதியை கைது செய்ததுடன் , பாரவூர்தியையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles